கூட்டத்தொடருக்கு முன் ருகுன் நெகாரா உறுதிமொழி அவசியம்-சபாநாயகர்

கோலாலம்பூர்:

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் எல்லா நாடாளுமன்ற உறுப் பினர்களும் ருகுன் நெகாரா உறுதிமொழியை வாசிப்பது அவசியமாகும் என்று சபா நாயகர் ஜோஹாரி அப்துல் கேட்டுக்கொண்டார் .

தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆரோன் அகோ டாகாங்கின் இந்த கோரிக்கையை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் இது ஒரு தீர்க்கமான முடிவாக இருப்பதால் இதை நாம் தொடரலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அமைச்சர் ஆரோன் அகோ டாகாங்கின் கோரிக்கையை மனிதவளம், கல்வி, மக்கள் மற்றும் கூட்ட விதிமுறைகள் செயற்குழுக்களுக்குப் பரிசீலனைக்கு அனுப்பி யதாகவும் இந்த தரப்புகளும் ருகுன் நெகாரா வாசிப்பைச் செயல்படுத்த ஒப்புக் கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதுவரை 213 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆறு செனட்டர்கள் உடல்நலப் பரிசோ தனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், மொத்தமாக எட்டு நாடாளுமன்ற உறுப் பினர்கள் இன்னும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் ஜோஹாரி தெரிவித்தார்.

உடல்நலப் பரிசோதனை செய்யத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களை டிசம்பர் 1-ஆம் தேதி மக்களவையில் தாம் வெளிப்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here