Tabung Haji மீது அவதூறு வீடியோ: MCMC விசாரணை தொடக்கம்

கோலாலம்பூர்:

சமூக ஊடகங்களில் பரவி வரும் Tabung Haji (TH)-க்கு எதிரான அவதூறு பரப்பும் வீடியோக்கள் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

குறித்த காணொளி தொடர்பில் TH நிர்வாகக் குழுவின் புகாரைத் தொடர்ந்து இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்று, தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாஃஹ்மி பாஃஸில் கூறினார்.

1998ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் (பிரிவு 233) கீழ் விசாரணை நடைபெறுகிறது என்றும், இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்சம் RM500,000 அபராதம் விதிக்கப்படும்.

“அவதூறு பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். போலியான உள்ளடக்கம் பரப்புவது மிகப்பெரிய குற்றமாகும்,” என்றும் பாஃஹ்மி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here