கோலாலம்பூர்:
பெர்சத்து (Bersatu) கட்சிக்கு, 2016 இல் இருந்து 2020-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வழங்கிய சட்ட சேவைகளுக்காக, வழக்கறிஞர் ஹனிஃப் காத்ரி அப்துல்லா (Haniff Khatri Abdulla) கோரிய RM12.5 மில்லியன் கட்டணத்தை, உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
நீதிபதி அக்தார் தாஹிர் (Justice Akhtar Tahir) தனது தீர்ப்பில், ஹனிஃப் தனது சேவைக்கான கட்டணத்தை, 2020-இல் நடந்த Sheraton Move நகர்வுக்குப் பிறகுதான் கோரினார் என்றும், அதுவரை அவர் எந்தக் கட்டணப் பட்டியலையும் வழங்கவில்லை என்றும் கூறினார்.
இதனிடையே, வழக்கறிஞரின் சேவைகள், தன்னார்வ அடிப்படையில் வழங்கப்பட்டதாகவே நீதிமன்றம் கண்டறிந்தது.
பெர்சத்து தலைவர்களான முயிடின் யாசின் (Muhyiddin Yassin), ஹம்சா சைனுடின் (Hamzah Zainudin), சாலே பஜூரி (Salleh Bajuri) ஆகியோரின் சாட்சியங்கள், மிகவும் நம்பகமானவை என்று நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இரு தரப்பினருக்கும் இடையில், கட்டணம் தொடர்பான எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை என்றும் அது குறிப்பிட்டது.
நீதிமன்றச் செலவுகளுக்காக RM150,000 ரிங்கிட் செலுத்தும்படி ஹனிஃப் காத்ரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அவர் கூறியுள்ளார்.
























