காசாவிற்காக RM100 மில்லியன் கூடுதல் உதவி – பிரதமர் அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர்:

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், பாலஸ்தீன மக்களுக்காக, குறிப்பாகக் காசாவிற்காக, மேலும் RM100 மில்லியன் கூடுதல் நிதியுதவியை அறிவித்துள்ளார்.

கோலாலம்பூர், மெர்டேக்கா சதுக்கத்தில் (Dataran Merdeka) நடைபெற்ற சுமூட் நுசாந்தரா 2025 (Sumud Nusantara 2025) விழாவின் உச்சக்கட்டமான ‘மலேசியா காசாவுடன்’ (Malaysiaku Bersama Gaza) எனும் நிகழ்ச்சியில் அவர் இதை அறிவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அறிவிக்கப்பட்ட RM100 மில்லியன் நிதியுதவிக்கு இது ஒரு கூடுதல் நிதியாகும்.

அதுமட்டுமின்றி, பாலஸ்தீனத்தின் சுதந்திரத்திற்கு மலேசியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அன்வார் வலியுறுத்தினார்.

இதனிடையே இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) கொடூரமான செயல்களை அவர் கடுமையாகக் கண்டித்தார்.

மேலும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களிடமும், மற்ற உலகத் தலைவர்களிடமும் காசாவிற்காகத் தாம் பேசி வருவதாக அவர் கூறினார். அத்துடன், மலேசிய நிறுவனங்களும் இந்த மனிதாபிமானப் பணியில் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மலேசியா பாலஸ்தீனத்திற்கு ஒருபோதும் ஆதரவளிக்காமல் இருக்காது என்றும் அவர் மீண்டும் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here