ஈப்போ:
தம்பூனுக்கு அருகிலுள்ள ஈப்போ திமூரில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 40 வயதுடைய ஒரு பெண் ஒருவர் தீக்காயமடைந்தார்.
சம்பவம் குறித்து காலை 10.39 மணிக்கு தகவல் கிடைத்ததும், தம்பூன், மேரு ராயா மற்றும் ஈப்போ ஆகிய நிலையங்களிலிருந்து தீயணைப்பு குழுக்கள், மற்றும் பெர்ச்சாம் தன்னார்வத் தீயணைப்புப் படையிநர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் என்று, பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இடைக்கால உதவி இயக்குநர் ஷாஸ்லீன் முகமட் ஹனாஃபியா தெரிவித்ததார் .
“தீ விபத்தில் மூன்று வீடுகள் பாதிக்கப்பட்டன. முதலாவது வீடு சுமார் 80 சதவீதம் எரிந்தது, இரண்டாவது வீடு 30 சதவீதமும், மூன்றாவது வீடு 10 சதவீதமும் சேதமடைந்தன,” என்று அவர் கூறினார்.
மேலும் 40 வயதுடைய பெண் ஒருவர் உடல் முழுவதும் தீக்காயமடைந்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்று அவர் மேலும் கூறினார்.




















