கோலாலம்பூர்:
சமூக வலைத்தளத்தில் (X) கலகத்தை ஏற்படுத்தும் வகையில் பிரதமருக்கு எதிராக கொலை மிரட்டல் பதிவுகளை வெளியிட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று பிரதமர் அன்வார் இஸ்ரேலுக்கு எதிராகத் தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பில் அதிருப்தியடைந்த அவர்கள் தளத்தில் கொலை மிரட்டல் விடுத்ததாக தேசியக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ M.குமார் தெரிவித்தார்.
பலமான இஸ்ரேலை அன்வார் எதிர்த்தால் அன்வாரின் வீட்டை இஸ்ரேல் தாக்க வேண்டும் என i.Facto.Real எனும் X கணக்கின் உரிமையாளரையும் Chong.Kaht.ze எனும் X கணக்கின் உரிமையாளரையும் கைது செய்திருப்பதாக Datuk M Kumar தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டிருக்கும் இருவரும் மலேசியர்கள் என்றும், 37 வயது 43 வயதுள்ள இருவரும் தேசத்துரோகக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
முதல் நபர் 2 நாள்கள் தடுப்புக் காவலிலும் மற்றொருவர் 4 நாள்கள் தடுப்புக் காவலிலும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
நாட்டின் அமைதிக்கு எதிரான செயல்களைத் தவிர்க்கும்படி அவர் பொதுமக்களுக்கு வலியுறுத்தினார்.





















