உலு சிலாங்கூர், உலு லங்காட் மற்றும் கோம்பாக் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு

ஷா ஆலம்:

இன்று மாலை 4 மணி வரை உலு சிலாங்கூர், உலு லங்காட் மற்றும் கோம்பாக் ஆகிய 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்புள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த வானிலை பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் இருக்கும் போது எச்சரிக்கைகள் வெளியிடப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை எச்சரிக்கைகள் என்பது எச்சரிக்கை வெளியிட்ட பின்னருள்ள ஆறு மணி நேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகும் ஒரு குறுகிய கால எச்சரிக்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here