கோலாலம்பூர்:
கிளந்தான், தானா மெரா (Tanah Merah), மூக்கிம் குசியாலில் (Mukim Kusial) உள்ள 251 ஹெக்டர் பரப்பளவு கொண்ட தங்கச் சுரங்கம், RM12 மில்லியனுக்கு விற்பனைக்கு உள்ளதாக, முகநூலில் (Facebook) வந்த விளம்பரம் குறித்து, கிளந்தான் அரசாங்கம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த இடம், 2025 டிசம்பர் 22 வரை, கிளந்தான் மாநிலப் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (PKINK) கீழ், ஸ்ரீ டாமாய் மைன் டிரேடிங் (Sri Damai Mine Trading) நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர் டத்தோ முகமட் ஃபட்ச்லி ஹசான் (Datuk Mohamed Fadzli Hassan), இந்த இடத்திற்கு வாடகைக் கால நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், இதுவரை அவர்கள் எந்த அறிக்கையையும், கட்டணத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று கூறினார்.
இதனிடையே, இந்த விளம்பரத்தை வெளியிட்ட நபரைக் கண்டறிய, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.





















