“உக்ரைன் பிராந்தியங்களைக் கைப்பற்றும் எண்ணம் ரஷ்யாவிற்கு இல்லை”: ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர்!

கோலாலம்பூர்:

உக்ரைன் பிராந்தியங்களைக் கைப்பற்றும் நோக்கம் ரஷ்யாவிற்கு இல்லை என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் (Sergey Lavrov) தெரிவித்துள்ளார்.

உக்ரைனிடமிருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அகற்றுவதும், ரஷ்ய கலாசாரத்துடன் இணைந்து வாழும் ரஷ்யர்கள், ரஷ்ய மொழி பேசும் சமூகங்களைப் பாதுகாப்பதுமே, ரஷ்யாவின் நோக்கம் என்று அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “உக்ரைன் அரசாங்கம், ‘நாசி ஆட்சி’ (Nazi regime) போல், ரஷ்ய சமூகங்களை ஒடுக்கி வருகிறது.

அவர்கள், தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. உக்ரைன், தனி நாடாக வாழ உரிமை உண்டு. ஆனால், ரஷ்யாவுடன் இணைய வாக்களித்த பகுதிகளில் உள்ள மக்களை அது அனுமதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு, உக்ரைன் அரசாங்கம், ரஷ்ய மொழிக்குக் கட்டுப்பாடுகளை விதித்தது, பள்ளிகளில் ரஷ்ய மொழியை நீக்கியது, மேலும் நகரங்கள், அடையாளச் சின்னங்களுக்குப் புதிய பெயர்களை வைத்து, ரஷ்யாவுடனான கலாசாரத் தொடர்புகளை அழித்துவிட்டது என்றும் லாவ்ரோவ் குற்றம் சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here