ETS3 ரயில் சேவை ஜோகூர் பாரு வரை டிசம்பர் 2025-க்குள் தொடங்கும் என மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அறிவித்தார்.
உள்கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சிக்னல் அமைப்புகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.
தற்போது, ETS3 சேவை செகாமட் வரை இயங்குகிறது, ஆகஸ்ட் 30 அன்று இது குளூவாங்கிற்கு நீட்டிக்கப்படும். இதன் இறுதி கட்டத்தில், ஜோகூர் பாரு சென்ட்ரல் வரை சேவை விரிவுபடுத்தப்படும்.
கிள்ளான் முதல் பெட்டாலிங் ஜெயா வரையிலான LRT3 ரயில் சேவையும் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
தொழில்நுட்பச் சோதனைகளில் சில தாமதங்கள் ஏற்பட்டாலும், திட்டத்தை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், போக்குவரத்து அமைச்சு அனைத்து திட்டங்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இதன் மூலம் பொதுமக்களின் போக்குவரத்து வசதி மேம்படுத்தப்படும் என்றும் லோக் தெரிவித்தார்.





















