கோலாலம்பூர்:
செமினியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 14-ஆவது மாடி நுழைவாயிலில் இருந்து, 48 வயது பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர் ஒருவர், இந்தச் சம்பவத்தைப் பார்த்ததாக, காஜாங் காவல்துறைத் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோப் (ACP Naazron Abdul Yusof) உறுதிப்படுத்தினார். அந்தப் பெண், கீழே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து, தலையிலும் தொடையிலும் கடுமையான காயங்களுடன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்காக, காஜாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தச் சம்பவம், திடீர் மரணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து, ஏதேனும் தகவல் தெரிந்தால், இன்ஸ்பெக்டர் மு’ஆஸ் மஸ்லானை 017-9788804 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.




















