கோழி மற்றும் முட்டை பற்றாக்குறை இல்லை: விவசாயிகள் சங்கம்

குவாந்தான்:

நாட்டில் கோழி மற்றும் முட்டைகளின் விநியோகம் போதுமானதாகவும் நிலையானதாகவும் உள்ளதால், நுகர்வோர் கவலைப்படத் தேவையில்லை என்று மலேசிய கால்நடை விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் (FLFAM) ஆலோசகர் டத்தோ ஜெஃப்ரி இங் உறுதிப்படுத்தினார்.

“இதுவரை கோழி அல்லது முட்டை பற்றாக்குறை குறித்து எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை. சந்தைகளிலும், பல்பொருள் அங்காடிகளிலும் கோழி மற்றும் முட்டைகள் சீராகவும் எளிதாகவும் கிடைக்கின்றன. பற்றாக்குறை குறித்த புகார்கள் எதுவும் நுகர்வோரிடமிருந்து எங்களுக்கு வரவில்லை. விநியோகம் போதுமானதாகவே உள்ளது,” என்று அவர் இன்று கூறினார்.

முழு கோழிகளுக்கான கொள்முதல் வரம்பு குறித்து விளக்கமளித்த அவர், சில சில்லறை விற்பனையாளர்கள் வழங்கும் சிறப்பு பிரமோஷன் விலைகளால் அதிக வாடிக்கையாளர்களுக்கு சம வாய்ப்பு கிடைக்கும்படி வரம்பு விதிக்கப்பட்டிருக்கலாம் என்றார்.

இதற்கிடையில், இங்குள்ள ஒரு முக்கிய ஹைப்பர் மார்க்கெட் சங்கிலியின் பிரதிநிதியும், கோழி மற்றும் முட்டைகளின் விநியோகம் சீராக உள்ளதாக உறுதி செய்தார்.

“உண்மையில், அடுத்த வாரம் வரும் பொதுவிடுமுறையை முன்னிட்டு கூடுதல் இருப்புகளை ஆர்டர் செய்துள்ளோம். இதுவரை பற்றாக்குறை அல்லது விலை உயர்வு குறித்த எந்த புகாரும் இல்லை,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here