‘சந்திரயான்-5’ திட்டத்தில் இந்தியா–ஜப்பான் இணைந்து கைகோர்க்கின்றன

இந்தியா மற்றும் ஜப்பான் அடுத்த சந்திர ஆராய்ச்சி முயற்சியாகும் ‘சந்திரயான்-5’ திட்டத்தில் இணைந்து பங்கேற்று முக்கிய தொழில்நுட்ப உதவிகளை வழங்க உள்ளன.

இந்த ஒத்துழைப்பு இந்தியாவின் சந்திர ஆராய்ச்சி மற்றும் விண்வெளித் துறையில் முன்னேற்றத்தை விருத்தி செய்யும் நோக்கத்தில் அமைகிறது. ஜப்பான் தரும் சாஃப்ட்வேர் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மூலம் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்கள் துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் முன்னெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

முன்னோடி சந்திரயான் திட்டங்களில் இந்தியாவின் வெற்றியால், சந்திர ஆராய்ச்சி துறையில் இந்தியா வலுவான நிலையைப் பெற்றுள்ளது. இச்சேர்க்கை, இரு நாடுகளுக்கும் இடையிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் விருத்தி செய்யும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here