பிரேதப் பரிசோதனையில் போலி மருத்துவர்” – ஜாரா கைரினா விவகாரத்தில் ஃபாமி ஃபாட்ஸில் அதிர்ச்சி

கோலாலம்பூர் – 13 வயது ஜாரா கைரினா மகாதீர் பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டதாகக் கூறி மருத்துவராக நடித்த நபர், விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார்.

அந்த நபர் போலி மருத்துவர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். “அவரை சட்டத்தின் முன் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று ஃபஹ்மி, இன்று நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) கிராண்ட் பிரிக்ஸ் 2025 மாநாட்டின் பக்க நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 16 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில், கோத்தகினபாலுவில் உள்ள பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததாகக் கூறப்படும் ஜாரா, பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த மரணம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், வழக்கு பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here