பேராக் சுல்தான் பாதுகாப்பு விவகாரம்: மன்ஜோய் சட்டமன்ற உறுப்பினர் மன்னிப்பு கோரினார்!

கோலாலம்பூர்:

பேராக் மாநில சுல்தான் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக, சமூக வலைத்தளத்தில், பதிவிட்டதற்காக, பாஸ் (PAS) கட்சியின், மன்ஜோய் சட்டமன்ற உறுப்பினர் ஹஃபேஸ் சப்ரி (Hafez Sabri) மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், அவரது கருத்து, பொறுப்பற்ற தரப்பினரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, திரித்து பரப்பப்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.

அதுமட்டுமின்றி, தனது கருத்து இனங்கள் அல்லது மதங்களைப் பற்றியது அல்ல என்றும், பாதுகாப்பை மேம்படுத்துவது மட்டுமே தனது கவலை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, தனது அசல் பதிவு, தவறான தகவல்களின் அடிப்படையில் அமைந்தது என்றும், பின்னர் அதைத் திருத்தியதாகவும் ஹஃபேஸ் சப்ரி ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், Hafezஇன் அசல் பதிவின் ஸ்கிரீன்ஷாட்கள் தொடர்ந்து பரவி வருவதால், அவர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here