கோலாலம்பூர்:
2022-ஆம் ஆண்டில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின், கூட்டுக் குழுமத்திற்குச் (Joint Management Body) சொந்தமான, RM75,776 பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும், இரண்டு தனித்து வாழும் தாய்மார்கள், நீதிமன்றத்தில், தங்கள் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்.
இந்த வழக்கு, இங்குள்ள செஸன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி குற்றஞ்சாட்டப்பட்ட 34 வயது நூர்லியானா அமிரா சுல்கிஃப்லி, 38 வயது நூராடிலா ரஸாலி ஆகியோர், முறையே இந்தக் குழுமத்தில் நிர்வாகியாகவும் மற்றும் உதவி நிர்வாகியாகவும் பணியாற்றியபோது, குடியிருப்பாளர்களின் பணத்தை, நிதி நிர்வாகத்திற்காகப் பயன்படுத்தாமல், முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவேதான், குற்றவியல் சட்டம் பிரிவு 408-இன் கீழ், அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையும் பிரம்படியும், அபராதமும் மிதிக்கப்படலாம்
இதனிடையே, இந்த இரு நபர்களுக்கும் நீதிபதி Azrul Darus ஒரு நபர் உத்தரவாதத்துடன் தலா RM5000 ரிங்கிட் பிணை அனுமதித்தார். இந்த வழக்கின் மறு செவி மடுப்பு அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறும்.



















