விஜயின் கச்சதீவு பேச்சு: இலங்கை அரசியலில் பரபரப்பு, மக்களிடையே கடும் கண்டனம்!

“நடிகர் விஜய்! நீங்கள் இலங்கை பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்டது தப்பல்ல. ஆனால் எங்கள் மண்ணை தருமாறு ஆசைப்படுவது பெரும் தப்பாகும்” என நடிகர் விஜய்க்கு எதிராக இலங்கையில் கண்டன ங்கள் வலுத்திருக்கின்றன.

அண்மையில் நடிகர் விஜய் பிரம்மாண்டமாக நடத்தி முடித்த மாநாட்டில், “கச்சதீவை இலங்கையிலிருந்து இந்தியா மீட்டுக்கொடுக்க வேண்டும்”” என்றார் அவர். இந்த விவகாரம் இலங்கையில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அங்கு, இன, மத பேதமின்றி இலங்கையர்கள் ஒன்றிணைந்து சமுக வலைத்தளங்களில் நடிகர் வியஜ்ய்யை கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும், இலங்கையின் அரசியலிலும் இந்த விவகாரம் சூடுபிடித்ததனால், இலங்கை அதிபர் உடனடியாக ஆபத்து நிறைந்த படகுப் பயணம்வழி கச்சதீவுக்கு சென்றிருந்தார். இலங்கை வரலாற்றில் ஒரு அதிபரின் இந்த பயணம் என்பது வரலாற்றில் முதல்முறை எனவும் கூறப்படுகிறது.

“ஒரு நடிகராக உங்களை நாங்கள் ரசிக்கிறோம். ஆனால் கட்சி ஆரம்பித்த உடனேயே எங்கள் நிலத்தை பறிப்பதில் உள்ள உங்கள் கவனம் குறித்து வேதனைப்படுகிறோம். நிலத்தால் நாங்கள் சிறிய ஒரு நாடு, எத்தனை பெரிய நிலப்பரப்பை கொண்ட உங்கள் ஆசை, எங்கள் மக்களை கோபப்படுத்துகிறது” என இலங்கை அரசியல்வாதிகள் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்தனர். இந்தியாவிலும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here