இரண்டாவது நாளாகத் தொடரும் மரண விசாரணை; நீதிமன்றத்திற்கு பொம்மையுடன் வந்த எதிர்தரப்பு வழக்கறிஞர்கள்

கோத்தா கினபாலு:

ஷாரா கைரினா மரண விசாரணை இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் பொம்மையுடன் நீதிமன்றத்தில் தோன்றிய காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆடவர்களின் சார்பில் வழக்காடும் டத்தோ ராம் சிங், தனது குழுவினருடன் இணைந்து இன்று மரண விசாரணை நீதிமன்றத்திற்கு ஒரு மனித உடல் வடிவ பொம்மையை கொண்டு வந்தார்.

இந்த பொம்மை, மரணமடைந்தவரின் உடலில் ஏற்பட்டிருந்த காயங்களின் தன்மை மற்றும் உடல்நிலையை விளக்குவதற்கு, குயின் எலிசபெத் மருத்துவமனை நோயியல் நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி ஹியுவிற்கு உதவுவதற்காக பயன்படுத்தப்பட்டது.

மேலும், இன்று நடைபெறும் அமர்வில் டாக்டர் ஜெஸ்ஸி, தனது விசாரணை அறிக்கையைத் தொடர்வதோடு, அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின் செயல்பாட்டு அதிகாரிகள், இறந்தவரின் பெற்றோர் மற்றும் பிற ஆர்வமுள்ள தரப்பினரின் கேள்விகளுக்கும், அவர்களின் வழக்கறிஞர்கள் மூலம் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here