கோலாலம்பூர்:
காஜாங்கில் உள்ள கம்போங் சுங்கை லோங் பகுதியில், ஒரு வீட்டில் நடத்தப்பட்ட காவல்துறை சோதனையின்போது, RM100,000 ரிங்கிட் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டதாக, பாதிக்கப்பட்டவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சோதனையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரும், பல காவல்துறை அதிகாரிகளும், சிலாங்கூர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி, அதிகாலை 2 மணியளவில், கொண்டாட்டங்கள் காரணமாக, ஏற்பட்ட சத்தத்தால், பொதுமக்கள் அளித்த புகார்களை அடுத்து, அங்கு சோதனை நடத்தப்பட்டது.
இந்த, சோதனையின்போது, பாதிக்கப்பட்டவரின் அறை, கலைந்து காணப்பட்டது. இதையடுத்து, சம்பவ மறுநாள், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 380-இன் கீழ், பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தார்.
எனவேதான், மேலதிக விசாரணைக்காக, இந்தக் கைதுகள் செய்யப்பட்டுள்ளன என்று, சிலாங்கூர் மாநில, காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி காஹார் (Datuk Shazeli Kahar) உறுதிப்படுத்தினார்.
























