கடலூரில், தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கோலாலம்பூர்:

கடலூர், கே.என்.பேட்டை பகுதியைச் சேர்ந்த சிவ சங்கரன் – ஞானசௌந்தரி தம்பதியருக்கு ஒன்றரை வயதில் இரட்டைப் பெண் குழந்தைகள் இருந்தனர்.

அதில், குணஶ்ரீ என்ற ஒரு குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அச்சிறுமி, எழுந்திருக்க முடியாமல் தண்ணீர் பக்கெட்டிற்குள்ளேயே மூழ்கி உயிரிழந்துள்ளார். நீண்ட நேரம் குழந்தையைக் காணவில்லை என தேடிய பெற்றோர், பக்கெட்டுக்குள் குழந்தை கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, குழந்தை குணஶ்ரீயின் உடல் மீட்கப்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here