தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம்: ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!

கோலாலம்பூர்:

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில், மேற்கொண்ட ஒருவாரப் பயணத்தின் மூலம், ரூ.15,516 கோடி மதிப்புள்ள முதலீடுகளை ஈர்த்துள்ளார். இந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு, சென்னை திரும்பிய அவர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது, இந்தப் பயணத்தில், 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கையெழுத்தாகியுள்ளன என்று, மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதனிடையே, சிலர், தனது வெளிநாட்டுப் பயணங்களை, பொறுத்துக்கொள்ள முடியாமல் புலம்புவதாக, முதல்வர் ஸ்டாலின் கூறினார். மத்திய அரசாங்கம் எவ்வளவுப் புறக்கணித்தாலும், தமிழகம், தொடர்ந்து, முதலிடத்தை நோக்கியே செல்கிறது என்றும், அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி இந்த வெளிநாட்டுப் பயணத்தை மாபெரும் வெற்றிப் பயணமாக, அவர், வர்ணித்தார்.

மேலும், தூத்துக்குடியைப் போலவே, ஓசூரிலும், முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று, தமிழ்நாடு முதல்வர் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here