சுகாதாரமற்ற சூழல்: கோழிப் பண்ணை மீது நடவடிக்கை!

கோலாலம்பூர்:

கோலாலம்பூர், புசட் பண்டார் உத்தாரா, செலாயாங் (Pusat Bandar Utara, Selayang) பகுதியில் உள்ள ஒரு வணிகக் கடையில், சுகாதாரமற்ற, சட்டவிரோதச் சூழ்நிலைகள் குறித்து, சமூக வலைத்தளங்களில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள், 99 கோழிகள், 11 வாத்துகள் உட்பட, 110 விலங்குகளைப் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே, தற்காலிகக் கூண்டுகள், துர்நாற்றம், கோழி ரத்தம், பொதுக் கழிவுநீர் வடிகாலில் கலப்பது போன்ற புகார்கள் வந்தன.

இதையடுத்து, கோலாலம்பூர் மாநகர் மற்றும் (DBKL), அந்தக் கடையை மூடுவதற்கு உத்தரவிட்டதுடன், முறையற்ற கழிவு அகற்றலுக்காக, அதன் உரிமையாளருக்கு, அபராதம் விதித்தது.

பொதுச் சுகாதாரம், தூய்மையைப் பாதுகாக்க, தொடர் கண்காணிப்புக்கு, DBKL உறுதியளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here