மலாக்கா,
ஜகார்த்தா & யோக்யகர்த்தா, இந்தோனேசியாவில் 1 – 15 செப்டம்பர் 2025 Binar 2025 International Summer camp முகாமில் மலேசிய திறந்த வெளி பல்கலைக்கழக மாணவர் தீபன்ராஜ் த/பெ சேகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மலாக்கா மாநிலத்தின் ஒரே பிரதிநிதியாகவும் . ஒரே ஓர் இந்திய மாணவராகவும் திகழ்கிறார்.
பன்னாட்டு கல்வி, கலாச்சாரம் மற்றும் தலைமை திறன் வளர்ச்சி நோக்கில் ஏற்பாடுச் செய்துள்ள இந்த முகாமில், ஜெர்மனியிலிருந்து ஜென்னி யியோ மற்றும் சீனாவிலிருந்து பான் ஷி மெங் ஆகியோர்களுடன் இணைந்து இவர் பணியாற்ற உள்ளார் இவர்கள் குழுவாக இணைந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் நாடுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட உள்ளார்
தீபன்ராஜ், தனது பயணத்தின் போது பாக் ரிஸ்கி ரிவால்தி அஃப்கானி என்ற பேராசிரியரின் வழிகாட்டுதலுடன் கல்வி மற்றும் கலாச்சார அறிவுரைகளை பெற்று இந்த முகாமில் பங்கேற்கிறார்.
தனது மகன் நாட்டை பிரதிநிதித்து இந்த முகாமில் கலந்துக் கொள்வது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக ஓய்வு பெற்ற இராணுவ வீரார்களான அவரது பெற்றோர் மேஜர் டத்தோ சேகர் –கோப்ரல் டத்தின் சகுந்தலா தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி, மலேசிய இளைஞர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் பன்னாட்டு பார்வையை உலகிற்கு காட்டும் முக்கிய மேடை எனும் வகையில் அமைந்துள்ளது.




















