சபா: வெள்ளம் காரணமாக 415 பேர் வெளியேற்றம்!

கோலாலம்பூர்:

சபா மாநிலத்தில், இன்று காலை, 8 மணி நிலவரப்படி, வெள்ளம் காரணமாக, 113 குடும்பங்களைச் சேர்ந்த, 415 பேர், இரண்டு தற்காலிக நிவாரண மையங்களிலும் ஒரு நிரந்தர நிவாரண மையத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலப் பேரிடர் மேலாண்மை குழுவின் கூற்றுப்படி படி, போஃவொர்ட், செலாகோன் நிரந்தர நிவாரண மையம் (Selagon permanent relief centre), செப்டம்பர் 9 முதல், திறக்கப்பட்டுள்ளது. இங்கு, 51 குடும்பங்களைச் சேர்ந்த, 155 பேர், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்றிரவு, பெய்த மழை காரணமாக, பெனாம்பாங், எஸ்.கே. செயிண்ட் பவுல், கொலோபிஸ் (SK St Paul, Kolopis, Penampang) தற்காலிக நிவாரண மையத்தில், 19 குடும்பங்களைச் சேர்ந்த, 59 பேர், தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, ஹுகுவான் சியாவ் மண்டபத்தில் (Dewan Huguan Siou), 32 குடும்பங்களைச் சேர்ந்த, 142 பேர், தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அங்கு, இந்த எண்ணிக்கை, குறைந்து வருகிறது.

இதனிடையே, மொத்தம், 22 கிராமங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதில், பெனம்பாங்கில், 14 கிராமங்களும், போஃவொர்ட்டில், எட்டு கிராமங்களும், அடங்கும்.

இதனிடையே மாநிலத்தில், பல மாவட்டங்களில், இடியுடன் கூடிய மழை, கனமழையும் பலத்த காற்றும் வீசும் என, மலேசிய வானிலை ஆய்வுத் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here