கோத்தா பாரு:
பெங்கலான் சேப்பாவில் உணவக சேதப்படுத்தும் ஒரு வீடியோ சமீபத்தில் வைரலானபிறகு, போலீசார் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், 25 வயது உணவக உரிமையாளர் ஒருவர் செப்டம்பர் 15 அன்று இரவு 7.20 மணியளவில் தனது உணவகத்தில் உள்ள கண்ணாடி காட்சி அலமாரியை ஒருவர் உடைத்ததாக புகார் அளித்தார். இந்த சம்பவம் கம்போங் லண்டக்கில் நடைபெற்றது என்று கோத்தா பாரு காவல்துறை தலைவர் உதவி ஆணையர் முகமட் ரோஸ்டி தாவூத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் கார் சந்தேக நபரின் மோட்டார் சைக்கிளை தடுத்ததாகக் கூறிய சந்தேக நபர் கோபமடைந்து, பின்னர் ஹெல்மெட்டை பயன்படுத்தி கடையின் கண்ணாடி அலமாரியை உடைத்தார். சம்பவத்தின் வீடியோ, “இம்ரான் பார்ட்” என்ற பேஸ்புக் கணக்கில் பதிவேற்றப்பட்டு, மறுநாள் வைரலாகியது.
புகாரைத் தொடர்ந்து, போலீசார் இன்று அதிகாலை 1 மணியளவில் சந்தேக நபரை கைது செய்தனர். இந்த வழக்கில் 36 வயதான சந்தேக நபர் விரைவில் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்று ரோஸ்டி தெரிவித்தார்.





















