கம்போங் சுங்கை பாரு குடியிருப்பு பகுதி: புதிய கட்டுமானப் பணிகள், 2026-இல் தொடங்கும்!

கோலாலம்பூர்:

கம்போங் சுங்கை பாருவின் (Kampung Sungai Baru) மறுசீரமைப்பு, அரசாங்கத்தால், இயக்கப்படும், ஒரு திட்டம் அல்ல. இது, நில உரிமையாளர்களுக்கும், நியமிக்கப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கும் இடையே, ஒரு தனியார் முயற்சி என்று, கம்போங் பாரு மேம்பாட்டுக் கழகம், PKB (Kampong Bharu Development Corporation – PKB) இன்று, தெளிவுபடுத்தியது.

இந்தக் கூட்டு முயற்சி ஒப்பந்தம், 969 அல்லது 1,200 சதுர அடி அளவிலான, மாற்று வீடுகள், பண உதவி, இடமாற்றச் செலவுகள் கட்டுமானத்தின்போது, தற்காலிகத் தங்குமிடங்கள் ஆகியவற்றை, வழங்குவதாக, `பி.கே.பி.’ கூறியுள்ளது. புதிய வீடுகளின் மதிப்பு, தற்போதுள்ள, வீடுகளை விட, குறைவாக இருந்தால், அடுக்கு மாடி நில உரிமையாளர்களுக்கு, கூடுதல் பணமும், வழங்கப்படும்.

மேலும், புனரமைப்பிற்காக, கருணைத் தொகையும், வழங்கப்படும்.

மேலும், அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு, தலா, RM884,000 முதல் RM1 மில்லியன் வரையிலும், மாற்று வீடுகளும், தரை வீடுகளின் உரிமையாளர்களுக்கு, RM2.7 மில்லியன் முதல் RM8.1 மில்லியன் மதிப்புள்ள, மூன்று முதல் ஒன்பது வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, நிலம் கையகப்படுத்துதல், 1960-ஆம் ஆண்டு, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ், ஜூன் 2021-இல், அதிகாரப்பூர்வமாக, அறிவிக்கப்பட்டது.
உரிமையாளர்களின் ஒப்புதல், கிட்டத்தட்ட, 72%-ஆக, உயர்ந்துள்ளது என்று, `பி.கே.பி.’, மேலும், கூறியுள்ளது.

வீடுகளின் இறுதி மதிப்பீட்டு எண்ணிக்கை, ஒப்புக்கொள்ளப்படுவதற்கு, முன், பல நிறுவனங்களால், அவற்றின் மதிப்புகள் தீர்மானிக்கப்பட்டன.

அதன் பின்னரே நிலத்தை மேம்படுத்தும் உரிமை, கட்டுமான நிறுவனத்திற்கு, மாற்றப்பட்டது.

எட்டு அடுக்குமாடி தொகுதிகள், டிசம்பர் 2023-இல், மாற்றப்பட்ட வேளையில், தரை வீடுகள், மார்ச் 2024-இல், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மாற்றப்பட்டன.

இதனிடையே 75 ஆட்சேபணை மனுக்கள், நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், தீர்ப்புக்காக, காத்திருக்காமல், மறுசீரமைப்புப் பணிகள், தொடரலாம் என்று, `பி.கே.பி.’, வலியுறுத்தியது.

இந்த, கட்டுமானப் பணிகள், 2026-ஆம் ஆண்டின், முதல் காலாண்டில், தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாற்று வீடுகள், 2029-ஆம் ஆண்டின், பிற்பகுதியில், ஒப்படைக்கப்படும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here