மலேசியாவில் அதிகம் விற்பனையான மின்சாரக் காராக ‘புரோட்டோன் இ.மாஸ் 7’ தொடர்கிறது!

கோலாலம்பூர்:

ஆகஸ்ட் மாதத்தில், புரோட்டோன் இ.மாஸ் 7 (Proton e.MAS 7), மலேசியாவில், தொடர்ந்து, எட்டாவது முறையாக, அதிகம் விற்பனையாகும், மின்சாரக் காராக, தனது நிலையை, தக்க வைத்துள்ளது.

புரோட்டோன் நிறுவனத்தின் துணை நிறுவனமான, புரோட்டோன் நியூ எனர்ஜி டெக்னாலஜி – PRO-NET (Proton New Energy Technology Sdn Bhd – PRO-NET), இந்த அறிவிப்பை, வெளியிட்டுள்ளது.

ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, மொத்தம், 5,811 கார்கள் விற்பனையாகி பயனர்களுக்கு, வழங்கப்பட்டுள்ளன. இதில், 5,455 கார்கள் உள்நாட்டிலும், 356 கார்கள் நான்கு அனைத்துலகச் சந்தைகளுக்கும், ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, இந்தச் சாதனை, வாடிக்கையாளர்களின், நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது என்று, புரோ-நெட்’ தலைமை நிர்வாக அதிகாரி, சாங் கியாங் (*Zhang Qiang) கூறினார். சாலைப் போக்குவரத்துத் இலாகாவின் (JPJ) தகவலின்படி, இந்த காரின் மாடல், *24% மின்சார வாகனச் சந்தைப் பங்கைக், கொண்டுள்ளது.

அதாவது, மலேசியாவில், விற்கப்படும், நான்கு மின்சார வாகனங்களில், ஒன்று, இ.மாஸ் 7’ ஆகும்.

புரோட்டோன், சமீபத்தில், புதிய வகைகள், புதிய வண்ண விருப்பங்கள், ஓவர்-தி-ஏர்’ (*over-the-air*) புதுப்பிப்புகளை, அறிமுகப்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல், பேராக்’, தஞ்சோங் மாலிமில் (Tanjung Malim, Perak), அதன், முதல் மின்சார வாகனத் தொழிற்சாலையை, அதிகாரப்பூர்வமாக, திறந்து வைத்துள்ளது.

இந்த தொழிற்சாலையின் ஆரம்ப திறனாக 20000 கார்கள் உற்பத்தி செய்யப்படும். இதனை படிப்படியாக 45,000-ஆக, அதிகரிக்கலாம். எனவே தான், புரோடோன் `இ.மாஸ் 7’ விரைவில், உள்நாட்டில், உற்பத்தி செய்யப்படும்.

இது, இந்த மாடல் கார் எளிதில் கிடைப்பதை, மேம்படுத்துவதோடு, வேலைவாய்ப்புகளை, உருவாக்குவது, உள்ளூர், மின்சார வாகன விநியோகச் சங்கிலியை, வலுப்படுத்துவதை, நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கை, அக்டோபரில், நடைபெறும், ஆசியான் உச்சி மாநாட்டிற்கு, முன்னதாக, போட்டித்தன்மை வாய்ந்த, புரோட்டோன் மின்சார வாகனத்தை, உருவாக்க வேண்டும் என்ற, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின், வேண்டுகோளுடன், ஒத்துப்போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here