நாட்டின் வளர்ச்சி பொருளாதார அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் உலகின் தலைசிறந்த 30 நாடுகளின் வரிசையில் மலேசியா இடம் பெற இலக்கு கொண்டிருப்பதாக ஸ்மார்ட் சிட்டி கோலாலம்பூர் எக்ஸ்போவை (SCEKL) தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.
உலகளவில் அனைவரும் செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. நாம் தற்போது இதில் சற்று பின்னோக்கி இருந்தாலும் 2030க்குள் நமது இலக்கை அடைவதற்கான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். நமது இலக்கை அடைவதற்கு அரசாங்கம், அரசாங்க ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் ஆதரவும் அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். இவ்வேளையில் இலக்கியவியல் (டிஜிட்டல்) அமைச்சர் கோபிந்த் சிங் டியோவுற்கு அவரின் துறைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்வதாக அன்வார் கூறினார்.

மிகவும் வசதி குறைந்தவர்கள், கிராமப்புறங்கள் உள்ளவர்கள் என அனைத்துத் தரப்பினரும் மலேசியர்கள் என்ற முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மடானி அரசாங்கத்தின் நோக்கம். அதற்கு செயற்கை நுண்ணறிவின் (AI) உதவி நமக்கு நிச்சயமாக தேவைப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு வழி பிரச்சினைகள் சுலபமாக கண்டறியப்பட்டு உடனடி தீர்வினை பெற முடியும். மேலும் காலத்திற்கேற்ப வரும் மாற்றத்தை நாம் கண்டிப்பாக ஏற்று கொள்ள வேண்டும். அந்த வகையில் ஸ்மார்ட் சிட்டி கோலாலம்பூர் காலத்தின் கட்டாயமாகும். உலக நாடுகளுக்கு ஏற்ப நாமும் செயலாற்ற வேண்டும் எனவும் பிரதமர் கூறினார்.
முன்னதாக உரையாற்றிய இலக்கியவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங், ஸ்மார்ட் சிட்டி ஆசியானுக்கு மிக அவசியமான ஒன்று என்பதனை நாம் அறிவோம். உதாரணத்திற்கு ஒரு விபத்து ஏற்படும்போது செயற்கை நுண்ணறிவு (AI) 200 மீட்டர் அளவிற்கு நடக்கும் அனைத்து விஷயங்களையும் படம் பிடித்து வைத்திருப்பதோடு விபத்து குறித்த எச்சரிக்கையையும் வெளியிடும். மேலும் விபத்து நடந்த விதம், யாரால் விபத்து ஏற்பட்டது அனைத்து விஷயங்களையும் துல்லியாக அறிந்து கொள்ள முடியும். அடுத்ததாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி, அருகாமையில் உள்ள மருத்துவமனை என அனைத்தையும் ஏஐ சுலபமாக்கி விடும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் செயற்கை நுண்ணறிவினால் பொருளாதாரம், தொழில்துறை உள்ளிட்டவைகள் அபார வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்லும். நமது பிரதமரின் 2030ஆம் ஆண்டிற்கான இலக்கினை அடைய நம் அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம் என்று கோபிந்த் சிங் டியோ கருத்துரைத்தார். ஸ்மார்ட் சிட்டி கோலாலம்பூர் எக்ஸ்போ (SCEKL) அறிமுக விழாவில் ஆசியானை சேர்ந்த பல முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.





















