கம்போங் சுங்கை பாரு சம்பவம்: எட்டு பேர் மீதுக் குற்றம் சாட்ட காவல்துறை கோரிக்கை!
கோலாலம்பூர்: செப்டம்பர் 11-ஆம் தேதி, கம்போங் சுங்கை பாருவில் நடந்த மோதலில், டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர், காயமடைந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, எட்டு உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள், அனைவர் மீதும், குற்றம் சாட்ட, துணை அரசு வழக்கறிஞரிடம், விசாரணை அறிக்கையை, மீண்டும், சமர்ப்பிக்கப்படும் என்று, கோலாலம்பூர் துணை காவல்துறைத் தலைவர், டிசிபி டத்தோ முகமட் யூசுப் ஜான் முகமட் கூறினார்.
நீதிமன்ற உத்தரவின்படி, கம்போங் சுங்கை பாரு குடியிருப்பு பகுதியில் அமைந்திருந்த கட்டிடங்கள், காலி செய்யப்பட்டபோது, இந்தச் சம்பவம், நிகழ்ந்தது.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக, காயமடைந்த காவல்துறைத் தலைவர், பிற அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட, 67 நபர்களிடம், வாக்குமூலங்கள், பெறப்பட்டுள்ளன.
அது மட்டுமின்றி எட்டு சந்தேக நபர்களும், விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
























