சரவாக்: முதலைத் தாக்குதலில், சிறுவன் பலி!

கூச்சிங்:

கோத்தா சமாரஹான்’, கம்போங் எம்பிலா’ (Kampung Empila, Kota Samarahan) பகுதியில், `ஆரிஃப் ஃபாஹ்மி ஐமான் முகமட் திங்கல்’ (Arif Fahmi Aiman Mohd Tinggal) என்ற, 12 வயதுச் சிறுவன், முதலைத் தாக்குதலில், உயிரிழந்தார்.

நேற்று காலை, 7.53 மணியளவில், படகில், வலையை, விரித்துக் கொண்டிருந்தபோது, இந்தச் சம்பவம், நடந்துள்ளது. சிறுவனின், அலறல் சத்தத்தைக் கேட்ட, ஒரு சாட்சி, அவர், தண்ணீரில், காணாமல் போனதை, பார்த்துள்ளார். உடனே, அவர், அதிகாரிகளுக்கு, தகவல், அளித்துள்ளார்.

`சபா தீயணைப்பு, மீட்புத் இலாகாவின்’ (Sabah Fire and Rescue Department), தேடுதல், மீட்புக் குழுவினர், கடைசியாக, சிறுவன், காணப்பட்ட, இடத்திலிருந்து, சுமார், 10 மீட்டர்கள் தொலைவில், அவரது, உடலை, கண்டெடுத்தனர். அவரது, உடலில், முதலை, கடித்த, காயங்கள், இருந்தன.

இதனைத் தொடர்ந்து சிறுவனின் உடல், மேலதிக விசாரணைக்காக, காவல்துறையிடம், ஒப்படைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here