Op Gasak: நடவடிக்கையின்வழி 102 LPG சிலிண்டர்களை கைப்பற்றியது பேராக் KPDN

ஈப்போ,

பேராக் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) நேற்று ஜலான் பந்தாய், கோலா குராவ், பாரிட் புந்தார் அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையில் 102 ம் LPG சிலிண்டர்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தது.

2025 இல் “Op Gasak” எனும் நடவடிக்கையின் கீழ் காலை 9:34 மணிக்கு இந்த ரெய்டு நடைபெற்றது. இது ஒரு வார கண்காணிப்புக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டது என அதன் இயக்குநர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் கூறினார்.

“இந்த சோதனையில் 12 மற்றும் 14 கிலோகிராம் 102 எல்பிஜி சிலிண்டர்கள் அனுமதி இல்லாமல் சேமிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கூடுதலாக, ஒரு லோரி மற்றும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு RM31,690.80,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

வணிக இடத்தின் உரிமையாளர் அனுமதி இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை சேமித்ததற்காக 1974-ஆம் ஆண்டு வழங்கல்களை கட்டுப்படுத்தும் விதிகள் உட்பட்ட குற்றத்தில் சந்தேகிக்கப்படுகிறார் என்றார் அவர்.

மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் தவறான பயன்பாட்டை WhatsApp: 019-8488000, [email protected], ஹாட்லைன்: 1-800-886-800 மற்றும் Ez Adu KPDN மொபைல் செயலி வழிகளில் புகார் செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here