போர்ட்டிக்சன் கடல் நீரில் பயோடாக்சின் அளவு குறைந்தது – கேராங் எனப்படும் மட்டி சாப்பிடுவது இன்னும் பாதுகாப்பற்றது

சிரம்பான்:

கோலாலம்பூர் மீன்வள உயிரியல் பாதுகாப்பு மையம் மேற்கொண்ட ஆய்வக சோதனைகள், போர்ட்டிக்சன் கடல் நீரில் உள்ள பயோடாக்சின் அளவு பில்லியனுக்கு 800 பாகங்களுக்குக் கீழே குறைந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளன.

நெகிரி செம்பிலான் மீன்வளத் துறை இயக்குநர் காசிம் தாவே, இதுவரை கெராங் எனப்படும் மட்டி (mussels) மற்றும் ஓடுகள் கொண்ட கடல்வாழ் விலங்குகளை பிடிப்பதற்கோ , உட்கொள்வதற்கோ விதிக்கப்பட்ட தடை இன்னும் அமலில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

“பயோடாக்சின் அளவுகள் தற்போது ஆபத்துக் குறிக்கு சற்றுக் கீழே குறைந்துள்ளன. எனினும், அவை தொடர்ந்து குறைவாகவும் நிலையானதாகவும் உள்ளனவா என்பதை உறுதிசெய்ய கூடுதல் மாதிரிகள் எடுக்க வேண்டியுள்ளது.

எனவே, தற்போது மட்டி மீன்களை பிடிக்கவும், உட்கொள்ளவும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்றும், பயோடாக்சின் அளவுகள் முழுமையாக பாதுகாப்பான நிலையை அடையும் வரை, வாரந்தோறும் மாதிரிகள் எடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்,” எனவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here