கோலாலம்பூர்:
மலாக்கா, பாயா ரூம்புட், ஜாலான் சொலோக் ஹிலிர் பகுதியில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஒரு `புரோட்டோன் எக்சோரா’ (Proton Exora) காருக்குள், 57 வயது, சபானா அபு ஹுசின், 25 வயது, இன்டான் நூர் ஷாஃபிக்கா ஒத்மான் ஆகிய, தாய், மகள், இருவரும், உயிரிழந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டனர்.
அலோர் காஜா, தாமான் கெலெமாக் ஜெயா பகுதியைச் சேர்ந்த அவ்விருவரும், காரின், முன் இருக்கைகளில், ஓய்வு எடுப்பதற்காக படுத்துக் கிடந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி காரின் இஞ்சினும் குளிரூட்டியும், ஓடிக்கொண்டிருந்தன. எனவே தான், வாகனத்திற்குள், ஏற்பட்ட, எரிவாயுக் கசிவு காரணமாக, அவர்கள், மூச்சுத்திணறி, இறந்திருக்கலாம் என்று, ஆரம்பக்கட்ட விசாரணைகள், தெரிவிக்கின்றன என்று, மலாக்கா காவல்துறைத் தலைவர், டத்தோ சுல்கைரி முக்தார் கூறினார்.
மேலும், இந்த சம்பவத்தில் காயங்கள் அல்லது, சந்தேகத்திற்கிடமானக் கூறுகள், எதுவும், கண்டறியப்படவில்லை. ஆகையால், இந்த வழக்கு, திடீர் மரணம் (sudden death) என, வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், முழுமையான, பிரேதப் பரிசோதனைக்காக, அவர்களின் உடல், மலாக்கா மருத்துவமனைக்கு, அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு, 12.24 மணியளவில், அவ்வழியாக, சென்ற, ஒருவரால், காவல்துறைக்கு அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து, காவல்துறையினரும், தடயவியல் அதிகாரிகளும், சம்பவ இடத்திற்குச் சென்று, அவர்களின் மரணத்தை, உறுதிப்படுத்தினர்.
இந்தச் சம்பவத்தில், குற்றவியல் கூறுகள் அல்லது, தற்கொலை முயற்சி இல்லை என்று, அதிகாரிகள், அறிவித்துள்ளனர்.
இருப்பினும், குடும்ப உறுப்பினர்களிடம், வாக்குமூலங்கள், பதிவு செய்வது உட்பட, விசாரணைகள், தொடர்ந்து, நடைபெற்று வருகின்றன.




















