புதுடெல்லி :
இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் விரைவில் உற்பத்தியைத் தொடங்கவுள்ளது என டெக்கான் கோல்டு மைன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஹனுமா பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரே தங்கச் சுரங்க நிறுவனம் டெக்கான் கோல்டு மைன்ஸ் ஆகும். ஆந்திரப் பிரதேசம், கர்னூல் மாவட்டம் அருகிலுள்ள ஜொன்னகிரி பகுதியில், ‘ஜியோ மைசூர் சர்வீசஸ்’ நிறுவனம் இந்த சுரங்கத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்த நிறுவனத்தில் டெக்கான் கோல்டு மைன்ஸ் முக்கிய பங்குதாரராக உள்ளது.
டெல்லியில் நடைபெற்ற இந்திய மைனிங் மாநாட்டில் பங்கேற்ற ஹனுமா பிரசாத், “சுரங்கத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
இந்தியா ஆண்டுதோறும் பெருமளவில் தங்கத்தை இறக்குமதி செய்கிறது.
கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தங்கம் அதிகம் இறக்குமதி செய்யப்படும் பொருளாக உள்ளது.
தற்போது இந்தியாவின் தங்க உற்பத்தி வருடத்திற்கு 1.5 டன் மட்டுமே.
ஜொன்னகிரி சுரங்கம் முழுமையாகச் செயல்படத் தொடங்கியதும், கூடுதலாக ஒரு டன் தங்கம் உற்பத்தி செய்யப்படும்.




















