ஈப்போ:
இன்று இங்குள்ள Buntong நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த 17 வயது சிறுவன் உயிரிழந்தான்.
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு சுகாதார அமைச்சகத்திலிருந்து காலை 11.26 மணிக்கு அவசர அழைப்பு வந்தது என்றும்,உடனே மேரு ராயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக செயல்பாட்டு உதவி இயக்குநர் ஷாஸ்லீன் முகமட் ஹனாஃபியா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் விழுந்த இடத்தை அடைவதற்கு முன்பு மீட்புக் குழு மலையடிவாரத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது என்றார்.
காயமடைந்த பாதிக்கப்பட்டவர், மருத்துவ ஊழியர்களிடமிருந்து ஆரம்ப சிகிச்சையைப் பெற்று சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.




















