சிரம்பான், நம்பிக்கை கூட்டணி- பாரிசான் இடையிலான கூட்டணி தலைமைத்துவம் கீழ் இயங்கும் நெகிரி செம்பிலான் அரசாங்கம் மாநில அளவில் சிறந்த அரசுக்கு நல்லதோர் உதாரணம் என அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடீன் ஹரூன் ப்ந்ருமிதம் கொண்டார்.
நெகிரி செம்பிலான் அரசாங்கத்தில் தலைமைப்தொடங்கி கடை நிலை வரையில் அனைவரும் இணைந்து பணியாற்றுகின்றனர்.
இது போன்ற சிறந்த ஒற்றுமை அரசாங்கத்தை நாம் வேறு எங்குன் பார்க்க வில்லை. மற்ற மாநில அரசாங்கங்களுடன் ஒப்பிடும்போது சரியான அம்சங்களுடனான ஒற்றுமை அரசாங்கம் இதுதான்.
நம்பிக்கை கூட்டணி- பாரிசான் கூட்டமைப்பு வாயிலாக இங்கு மேம்பாடு சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிகிறது.
வரும் காலங்களில் நாடு தொடந்து வெற்றி பெற இம்மாநில ஒற்றுமை அரசாங்கத்தை மற்ற மாநிங்களும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் நெகிரி ஜசெக மாநாட்டில் கலந்து கொண்ட அவர் சொன்னார்.




















