பிஎச்- பிஎன் கூட்டணி தொடந்தால் நாங்கள் வென்ற தொகுதிகள் எங்களுக்கே! ஜசெக உறுதி

சிரம்பான், நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலிலும் நம்பிக்கை கூட்டணியும் பாரிசான் நேஷனலும் கூட்டமைப்பை தொடந்தால் இதற்கு முன் தாங்கள் வென்றெடுத்த அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிடுவோம் என ஜசெக கூறியுள்ளது.

கூட்டணி கட்சிகளிடையே செய்துக் கொண்ட ஒப்புதல் கொள்கைக்கு ஏற்ப இந்த நிலைபாடு உள்ளது என்று ஜசெக தலைமை செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கட்சிகள் ஏற்கெனவே வெப்ற தொகுதிகளை தொடரப்பட வேண்டும் என்ற க்ள்கை தொகுதி பங்கீட்டின் இருக்க வேண்டும்.
அதே சமயம் எதிர்கட்சிகக் வென்ற தொகுதிகள் கட்சி தலைமைத்துவ பேச்சுவார்த்தையை பொறுத்துள்ளது.

மேலும் ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் இந்த கூட்டமைப்பை தொடர்வதோடு சிறந்ததை வழங்க ஜசெகவும் தயாரா உள்ளது. ஆனால் பாரிசானையும் பொறுத்துள்ளது என்று இன்று நெகிரி செம்பிலான் ஜசெக தொடர்புக் குழு மாநாட்டை தொடக்கி வைத்த அவர் விவரித்தார்.

இதற்கிடையே பாரிசான் நேஷனலுக்கும் (அம்னோ) மசீசவுக்கும் இடையிலான பிரச்சனைக்கு ஜசெக தான் காரணமா? என்ற கேள்விக்கு, அது அவர்களுக்கு இடையிலான விவகாரம்.

அதில் நாங்கள் நுழைய. வேண்டாம் என நான் கருதுகிறேன். இரச்சன் ஏற்பட்டால் மற்றவர்களை குறை சொல்ல கூடாது எனவும் போக்குவரத்து அமைச்சருமான அந்தோனி லோக் சூசகமாக பதில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here