பெயர் மட்டும் போதாது-பலன்தான் முக்கியம்!

தற்போதைய தடுப்பூசிகள் வேலை செய்யுமா?

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், இந்தியாவில் தற்போது வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் யு.கே, பிரேசில் வகை ஆகியவற்றுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் செய்யப்பட்ட ஆய்வில், ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி யு.கே வகைக்கு எதிராக சிறப்பாகச் செயல்படுவதாகவும் தெரிகின்றது. எனினும் தென்னாப்பிரிக்க வகைக்கு  எதிராக கிட்டத்தட்ட அனைத்து தடுப்புசிகளும் நோய் எதிர்ப்புத்திறன் குறைந்ததாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அப்படியானால் மலேசியர்களுக்கு உகந்த தடுப்பூசி எது பொருந்தும் என்ற  கேள்வியும் எழாமல் இல்லை.

கோவிட் தொற்று மலேசியர்களையும் விட்டுவைக்கவில்லை. அதன் உருமாற்றம் மலேசியர்களையும் விடப்போவதுமில்லை. பாதுகாப்பை பின்பற்றுதலில் பலவீனம் இருப்பதால் தொற்று அதிகரித்து வருகிறது.  இத்தொற்றின் பரணாமம் உடற்கூறுக்கு ஏற்ப தடுப்பூசியும் மாறுபடலாம். ஆதலால் அவரவர் தன்மைக்கேற்ப தடுப்பூசிவகை என்பதே சரியானதாக இருக்கும் என்பதே பொதுவான கருத்தாக  நிலவுகிறது.

உடல் வாகு,  வீரியத்தன்மைக்கேற்ப தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என்பதையும் மக்கள் அறிய விரும்புகிறார்கள். அதேவேலை பி 40 பிரிவு மக்கள் இன்னும்  தடுப்பூசி பற்றியும் , அது எப்போது தங்களுக்குப் போடப்படும் என்பது பற்றியும் புரியாதவர்களாகவே இன்னும் இருக்கிறார்கள். 

அனைவருக்கும் தடுப்பூசி முடிவுக்கு வருவதற்குள் நான்காம் அலை உருமாற்றத்துடன் எதிர்கொண்டால் தடுப்பூசியின் தன்மையும் மாற்றப்பட நேரிடலாம். 

முதலில் யாருக்கு!

முதலில் யாருக்கு என்பது தெரிந்த செய்திதான். அடுத்து வயதானவர்களுக்கு என்றால் அதில் அவசரம் காட்டப்படவில்லை என்பதாகவே தெரிகிறது. இன்னும் ஒருசில மாதங்களில் மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போடப்படவேண்டிய நிலை எந்த அளவில் இருக்கிறது என்பதே இருட்டில் பொருளைத் தேடுதாலாகவே உணரப்படுகிறது. அப்படியிருந்தால் வெளிச்சம் காட்டப்படவேண்டும். 

அதோ என்றும் இதோ என்றும் கதைகளைக்கேட்க மக்கள் தயராக இல்லை. விரைவில் அதற்கான் முயற்சியும் யாருக்கு எந்தவகை என்பதும் அது எப்போது என்பதையும் தெரிந்தவர்களாக மக்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அச்சம் விலகும்.

அப்படி நடப்பதாகவோ, அவசரம் காட்டப்படுவதாகவோ பேசப்படவில்லை என்ற அதிருப்தி அதிகமாக இருக்கிறது. அனைவரும் மை செஜாத்ர மூல பதிந்துகொள்வார்க என்பது தவறாகவே இருக்கும்.

அப்படியானால் மாற்றுவழிதான் என்ன?

 

-கா.இளமணி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here