காஸா:
காஸா பகுதியில் அமைதியை நிலைநிறுத்துவதற்காக குறைந்தது 20,000 வீரர்களை அனுப்பத் தயாராக உள்ளதாக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 23, செவ்வாய்க்கிழமை, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றிய பிரபோவோ, உலகின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள்தொகையைக் கொண்ட நாடான இந்தோனீசியா,
“வலிமையால் சரியானதைச் செய்ய முடியாது என்பதைக் காட்டும் அமைதியை விரும்புகிறது,”
என்று வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், “ஐ.நா மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அமைதிக்குத் தேவையான இடங்களில் சேவை செய்ய எப்போதும் தயாராக இருக்கிறோம். ஐ.நா பாதுகாப்பு மன்றமும் பொதுச் சபையும் முடிவெடுத்தால், காஸாவில் அமைதிப் பணிக்காக 20,000 அல்லது அதற்கு மேற்பட்ட இந்தோனேசியர்களை அனுப்புவோம்,” என்று தெரிவித்தார்.
பிரபோவோ, காஸாவுக்கு அப்பால் உக்ரைன், சூடான், லிபியா போன்ற இடங்களிலும் தேவையெனில் அமைதிப் பாதுகாவலர்களை அனுப்புவதற்கு இந்தோனேசியா தயாராக இருப்பதாகவும் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் நீடித்து வரும் நிலையில், காஸாவிற்குப் பிந்திய அரசியல் திட்டம் குறித்து அமெரிக்காவும் அரபு நாடுகளும் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் இதுவரை உறுதியான தீர்வு எட்டப்படவில்லை.






















