கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர், துன் டாக்டர் மகாதீர் முகமட் மீதான, சொத்து விசாரணை, `சர்வதேச ஊழல் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தின்’ உதவியுடன் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட விசாரணைகளுக்குப் பிறகு இப்போது சுவிட்சர்லாந்துக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒரு பில்லியன் ரிங்கிட்டிற்க்கும் அதிகமான சொத்துகளைக் கொண்டிருப்பதாக, அறிவித்த மகாதிருக்கும் அவரது, மகன்களுக்கும் தொடர்புடைய, சொத்துகளை கண்டறியும் முயற்சிகள் நடந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர், டான்ஸ்ரீ அஸாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில், 18 அமலாக்க அதிகாரிகள் உட்பட 27 சந்தேக நபர்களை உள்ளடக்கிய `கவுண்டர் செட்டிங்’ (counter setting) ஊழல் குறித்த விசாரணைகள் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் மூன்று வாரங்களில் அது குறித்த தகவல்கள் வெளியாகும் என்றும் அஸாம், கூறினார்.





















