சபா தேர்தல் : 2 உட்புற தொகுதிகளில் போட்டியிட ஜசெக எண்ணம்

கோத்தா கினபாலு:

சபா மாநில தேர்தலில் தமது வேட்பாளர்கள் போட்டியிடக் கூடிய குறைந்தது 2 உட்புற தொகுதிகளை ஜசெக அடையாளம் கண்டுள்ளது.

மேலும் அத்தேர்தலில் கட்சியின் வியூக திட்டத்தின் ஓர் அங்கமாக தஞ்சோங் ஆறு தொகுதியில் போட்டியிடவும் ஜசெக எண்ணம் கொண்டிருப்பதாக அதன் தலைமைச் செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார். குறிப்பாக இத்தேர்தலில் 8இல் இருந்து 10 தொகுதிகளில் போட்டியிடும் இலக்கிற்கு ஏற்ப இந்த எண்ணம் உள்ளது.
மேலும் நம்பிக்கை கூட்டணி, பாரிசான் நேஷனல், ஜிஆர்எஸ் தரப்புகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றோம்.

கடந்த முறையை விட இம்முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு எதிர்பார்க்கின்றோம் என்று இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கூறினார்.

இதனிடையே உட்புற தொகுதியில் போட்டியிடுவது ஜசெகவிற்கு புதிய முயற்சி அல்ல. மாறாக அது அனுபவம் அடிப்படையிலானதாகும். ஜசெக ஏற்கெனவே பிங்கோர் தொகுதியில் போட்டியிட்டுள்ளது எனவும் போக்குவரத்து அமைச்சருமான அவர் சுட்டிக் காட்டினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here