காசாவில் MSF தமது நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டுள்ளது

மாஸ்கோ:

இஸ்ரேலிய இராணுவ படையினரின் ஊடுருவலால் எல்லை கடந்த மருத்துவ அமைப்பு (MSF) காசாவில் தமது மருத்துவ செயல்ப்பாடுகளை நிறுத்திக் கொண்டுள்ளது.
எங்கள் கிளினிக்குகளை இஸ்ரேல் இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளதால் மருத்துவ நடவடிக்கைகளை நிறுத்துவதை தவிர வேறு வழி இல்லை என அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

காசாவில் நிலைமை மிகவும் நெருக்கடியாக உள்ளது. பச்சிளம் குழந்தைகள் கூட அவசர பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏராளமானோருக்கு பலத்த காயங்களும் உயிரை காவு வாங்கும் அளவிலான நோய்களும் ஏற்பட்டுள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள் தொடர்ந்து மோசமாகி வருவதால் நிலைமை அபாய நிலையில் உள்ளது என்று காசாவின் அவசர சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் ஜேக்கோப் கிரேகர் சொன்னதாக அந்த அறிக்கையில் தகவல் உள்ளது.

இந்த நிலையில் காசாவில் பொது மக்களை பாதுகாக்கவும் அங்கு சேவையாற்றி வரு பொது அமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நிலையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படுவதோடு பயங்கவாதம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் எம்எஸ்எப் வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here