ராஜயோகம் தரும் பெருமாள் வழிபாடு

புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அதனால் தான் பலரும் பெருமாளுக்காக புரட்டாசி மாதத்தில் அசைவத்தை தவிர்த்து விட்டு விரதம் இருந்து சனிக்கிழமை பெருமாளுக்கு படையல் இட்டு வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு சனிக்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்த சனிக்கிழமை தான். அதிலும் குறிப்பாக நவராத்திரியோடு சேர்ந்து வரக்கூடிய இந்த சனிக்கிழமையில் நாம் செய்யக்கூடிய எளிமையான ஒரு தீப வழிபாடு நம்முடைய வாழ்க்கையை ராஜயோகமான வாழ்க்கையாக மாற்ற உதவும்.
நம்முடைய வாழ்க்கையில் வாழ்வதற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தரக்கூடியவர்களாக தான் பெருமாளும் மகாலட்சுமியும் திகழ்கிறார்கள். இவர்களுக்கு உரிய சிறப்பு மிகுந்த நாளாக தான் புரட்டாசியில் வரக்கூடிய இரண்டாவது சனிக்கிழமை ஆன செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி திகழ்கிறது. இன்றைய நாளில் நாம் மகாவிஷ்ணுவையும் அதே சமயம் மகாலட்சுமியையும் வழிபாடு செய்யும்பொழுது நவராத்திரிக்குரிய வழிபாட்டு பலனையும் பெருமாளுக்குரிய சனிக்கிழமை வழிபாட்டு பலனையும் எளிதில் பெற முடியும்.
இந்த வழிபாட்டை இன்று ராகு கால, எமகண்ட நேரத்தை தவிர்த்து விட்டு மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக மாலை நேரத்தில் செய்வது  மிகவும் சிறப்பு. பெருமாளின் படத்திற்கு முன்பாக ஒரு தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டில் துளசி இலைகளை பரப்பி அதற்கு மேல் சில துண்டுகள் பச்சை கற்பூரத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த நெய்யில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி ஏற்றி வைத்த தீபத்திற்கு முன்பாக ஒரு வெள்ளை நிற பேப்பரில் நம்முடைய வேண்டுதல் என்னவோ அதை நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தி எழுதி அதனுடன் 101 ரூபாயை வைத்து மடித்து பெருமாளின் பாதத்தில் வைத்து விட வேண்டும்.
எப்பொழுது இந்த வேண்டுதல் நிறைவேறுகிறதோ அப்பொழுது பெருமாளின் ஆலயத்தில் இருக்கக்கூடிய உண்டியலில் கொண்டு போய் சேர்த்து விட வேண்டும். இந்த தீபம் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீபத்தை ஏற்றும்பொழுது கண்டிப்பாக முறையில் பெருமாளுக்கு துளசி தீர்த்தத்தையும், ஏதாவது ஒரு இனிப்பு பொருளையும் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இனிப்பு பொருள் எதுவும் இல்லை என்னும் பட்சத்தில் டைமண்ட் கற்கண்டு, சர்க்கரையை கூட வைக்கலாம்.

பெருமாளை முழுமனதோடு நினைத்து இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு பெருமாளின் அருளாலும் மகாலட்சுமியின் அருளாலும் ராஜ யோக வாழ்க்கை அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here