UM நுழைவாயிலில் வெள்ளமா? அது பொய்த் தகவல்! டிபிகேஎல் விளக்கம்

கோலாலம்பூர்,

மலாயா பல்கலைக்கழக நுழைவாயில் முன்புறம் வெள்ளம் ஏற்பட்டதாக வெளிவந்த தகவல் போலி என கோலாலம்பூர் மாநகர் மன்ற (டிபிகேஎல்) தரப்பு தெளிவுப்படுத்தி உள்ளது.

முன்னதாக டிக்டாக் கணக்கு ஒன்றில் இது குறித்து காணொளி பகிரப்பட்டிருந்தது.

ஆனாலும் அந்த காணொளி உண்மை கிடையாது. அங்கு அப்படியொரு வெள்ளச் சம்பவம் நிகழவில்லை என்பதை டிபிகேஎல் மீட்பு படையினர் உடனடியாக மேற்கொண்ட விசாரமையில் உறுதிப்படுத்தபட்டுள்ளது.
அந்த காணொளி மக்கள் மத்தியில் போலியான தகவலை பகிர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.
தலைநகர் முழுவதும் வானிலை உட்பட அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் மீதும் மாநகர் மன்ற தரப்பு அக்கறை கொண்டுள்ளது.

அதே சமயம் அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது எனவும் அந்த அமைப்பு தமதறிக்கையில் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here