இஸ்கண்டார் புத்ரி:
சாலை தடுப்பு சோதனையின்போது தகாத சொற்களால் போலீசார் பணி செய்வதற்கு இடையூறு விளைசித்த சிங்கப்பூர் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று கெலாங் பாத்தா அருகே லிங்க்2 நெடுஞ்சாலையின் 3.8ஆவது கிலோ மீட்டரில் இரவு 8.30 மணியளவில் நிகழ்ந்தது.
அப்போது அந்த 29 வயது பெண் ஓட்டி வந்த ஹொண்டா ரக கார் விதிமுறைகளை மீறியிருந்ததாக அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனாலும் அவர் சோதனையின் போது போலீஸ் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தராமம் அவர்களை தகாத சொற்களால் திட்டியதாக இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் எம். குமரேசன் தெரிவித்தார்.
அதே சமயம் அந்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர், மது சோதனையில் குற்ற அம்சங்கள் ஏதும் இல்லை. ஆனாலும் வாகன புகை குழாயை மாற்றி அமைத்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் குற்றவியல் சட்டம் பிரிவு 186, 1955 சிறு குற்றச் சட்டம் பிரிவு 14, 1959\63 குடிநுழைவு சட்டம் பிரிவு 6(1)(சி) ஆகிய பிரிவுகளின் கீழ் அந்த பெண் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றார் அவர்.



















