Tiktok க்கு தடை விதித்தது நேபாளம்!

நேப்பாள அரசாங்கம், அதன் மக்களிடையே பிரபலமான டிக்டாக் சமூக ஊடகச் செயலியை தடை செய்வதாக நேற்று (நவ.13) அறிவித்தது.

Tiktok, வெறுப்புணர்வைத் தூண்டும் உள்ளடக்கங்களை அகற்ற மறுப்பதாகவும், இதனால் நாட்டின் சமூகப் பிணைப்பு பாதிக்கப்படுவதாகவும் அந்நாட்டின் அரசாங்கம் கூறியது.

உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்டோர் Tiktok செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். 

இமய மலைச் சிகரத்தின் நாடான நேப்பாளின் 30 மில்லியன் மக்கள் தொகையை இத்தடையால் Tiktok ஐ இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tiktok உட்பட டஜன் கணக்கான சீன செயலிகளுக்கு ஏற்கெனவே இந்தியா தடை விதித்துள்ளது.

இரண்டு நாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினையால் இந்தியா, சீனாவின் செயலிகளுக்கு முன்னதாக தடை விதித்தது.

அமெரிக்கா, ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகளிலும் Tiktok க்கு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன.

அந்த ஊடகத்தில் இடம்பெறும் மிகவும் முக்கியமான தகவல்கள் சீன அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்வதாக Tiktok க்கு எதிரான பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here