கிள்ளான்:
மலேசியாவின் முன்னணி மொத்த வியாபார நிறுவனமான GM KLANG
அதன் 16ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இக்கொண்டாட்டத்தின் மைல்கல்லாக அந்நிறுவனம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
தன்னுடைய விசுவாசம் மிக்க வாடிக்கையாளர்களுக்கு ஓர் இன்பச் செய்தியாக அந்த அறிவிப்பு அமைந்துள்ளது. 2025 நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி அதன் செயல்பாட்டு நேரம் காலை 10 மணி தொடங்கி இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அந்த அறிவிப்பு.
இத்திட்டமானது நீண்ட நேரம் திறந்திருக்கிறது என்பதல்ல. ஆனால் முதல் நாளில் இருந்து இன்றளவிலும் GM KLANG பயணத்தில் வற்றாத ஆதரவை வழங்கி வரும் பல லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் வகையில் இந்த அர்த்தமுள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
நீண்ட வியாபார நேரமானது இங்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்வதற்கும் சுவையான உணவுகளைச் சாப்பிடுவதற்கும் புதிய மேலும் மனதுக்கு அமைதி தரும் சூழலை அனுபவிக்கவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. காலை முதல் இரவு வரை களைப்பு இல்லாமல் புத்துணர்ச்சியுடன் தங்களின் நாளை போக்குவதற்கு ஓர் உகந்த சூழ்நிலை இங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.
புதிய செயல்பாட்டு நேரத்தின் முதல் நாளில் GM KLANG Ceritera Selangor என்ற கருப்பொருளோடு 2025 நவம்பர் 1ஆம் தேதி சனிக்கிழமை ஒரு சிறப்புக் கொண்டாட்டத்தை நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சியை கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் மேயர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் ஹுசேன் தொடங்கி வைப்பார்.
இதில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், பாரம்பரியமிக்க ஃபேஷன் கண்காட்சிகள், மிகவும் பிரபலமான மேலும் பரவலான உணவு வகைகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இந்த நிகழ்ச்சியானது நீண்ட நேரத் திறப்பு அறிமுகத்தை மட்டும் காட்டுவதாக இருக்காது. மாறாக GM KLANG-இல் வண்ணமிகு குடும்பம்- நட்புறவு நிறைந்த இரவு கலாச்சாரத்தின் ஒரு தொடக்கமாக இருக்கும் என்று அதன் பிராண்ட் தொடர்பு இலாகா சீனியர் நிர்வாகி நூர்சுஹைடா ஒஸ்மான் கூறினார்.
மாலை வேளை மிகவும் உற்சாகம் தரக்கூடியதாக இருக்கும். ஒவ்வொரு மணித்துளியும் ஒரு புதுவிதமான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்குத் தருவதாக இருக்கும். அனைத்து சமூகத்தினரும் ஒன்றாகத் திரண்டு வந்து குடும்ப, நட்பு உணர்வுகளை அனுபவிப்பதற்கு இதுவே சரியான தருணம் என்று அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மாலைப்பொழுதிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இரவு நேரச் சூழலை மேலும் ரம்மியமாக்கும். வியாபாரத்திற்கு அப்பால் இங்கு வந்துபோகும் வாடிக்கையாளர்கள் உற்சாகமிகு அனுபவங்களைப் பெற வேண்டும் என்பதுதான் தங்களது விருப்பம் என்று நூர்சுஹைடா ஒஸ்மான் கூறினார்.
வாடிக்கையாளர்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் இலவச பார்க்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வியாபார நீட்டிப்பு காலகட்டத்தில் மாலை வேளைகளில் ஏற்பாடு செய்யபட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் கட்டம் கட்டமாக நடத்தப்படும்.
இவற்றுள் Night Crazy Deals எனும் ஒரு பிரத்தியேக நிகழ்ச்சி இரவு மணிக்குத் தொடங்கும். மாதாந்திர இரவு அதிர்ஷ்டக் குலுக்கும் நடைபெறும். Shop & Win at GM KLANG எனும் அந்த அதிர்ஷ்டக் குலுக்கு மோட்டார் சைக்கிகள், விவேக தொலைக்காட்சிகள் போன்ற பிரதான பரிசுகளை வழங்குகிறது.
2026 மலேசிய வருகை ஆண்டை முன்னிட்டு பொதுமக்களுடன் இணைந்து வாணிபம், சுற்றுலாவுக்கு புகழ் பெற்ற ஒரு முனையமாக GM KLANG திகழ வேண்டும் என்ற கடப்பாட்டுடன் தாங்கள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முன்னெடுத்து வருவதாக அவர் சொன்னார்.





















