கோத்தா கினபாலு:
சபா மாநில அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. 17-ஆவது சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் மிகப் பெரிய அரசியல் போட்டிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. மாநிலத்திலுள்ள 73 தொகுதிகளில் மொத்தம் 596 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் அறிவித்துள்ளது. இன்று காலை 10 மணியுடன் முடிவுற்ற வேட்புமனுத் தாக்கலுக்கு பின் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விவரம் உறுதிப்படுத்தப்பட்டது.
🔹 GRS முதல் Warisan வரை கடுமையான போட்டி
ஆளும் கூட்டணியான Parti Gabungan Rakyat Sabah (GRS) சார்பில் 55 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் தனது தலைமையிலான கட்சியின் வெற்றிக்கு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஷாபி அப்டால் தலைமையிலான Warisan கட்சி அனைத்து 73 தொகுதிகளிலும் போட்டியிடுவது இந்தத் தேர்தல் மிகப்பெரிய மூவ்மென்ட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
🔹 பிற முக்கிய கட்சிகள் போட்டிப் பட்டியல்
எஸ்பிஆர் வெளியிட்ட விவரங்கள் வருமாறு:
- Parti Impian Sabah – 72 வேட்பாளர்கள்
- STAR (டத்தோஸ்ரீ ஜெப்ரி கிட்டிங்கான்) – 46
- Barisan Nasional (BN) – 45
- Perikatan Nasional (PN) – 42
- KDM – 40
- UPKO – 25
- Pakatan Harapan (PH) – 22
- Parti Kebangsaan Sabah – 20
- Anak Negeri – 17
- PPRS – 16
- PBK – 14
Rumpun – 7 இதன் மூலம், சபாவில் 24 அரசியல் கட்சிகள் ஒரு நேரத்தில் மோதும் மிகப்பெரிய அரசியல் அரங்கம் உருவாகியுள்ளது.
🔹 சுயேட்சைகள் கணிசமான அதிகரிப்பு
அரசியல் கட்சிகளுக்கு இணையாக 74 பேர் சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளமை, இந்தத் தேர்தல் அதிக பந்தயம் நிறைந்ததாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.
🔹 சபா தேர்தல் சூழல்: பன்முக அரசியல் போட்டி
பல கட்சிகள், கூட்டணிகள் போட்டியிடுவதால், தலம்தோறும் கடுமையான மோதல்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம். வாக்காளர்களின் மனதை கவர ஒவ்வொரு கட்சியும் தமது முழு திறனும் ஆற்றலையும் இந்தத் தேர்தலில் செலுத்த உள்ளன.
சபாவின் எதிர்கால அரசியல் அமைப்பு இந்தத் தேர்தலுக்குப் பின் எந்த திசையில் நகரும் என்பதை ஆவலுடன் நாடு முழுவதும் அரசியல் வட்டாரங்கள் கவனித்து வருகின்றன.




















