பேராக் மாநிலத்தில் 60-க்கும் மேற்பட்ட வேப் கடைகள் 2026 ஜனவரி 1 முதல் மூடப்பட வேண்டும்

ஈப்போ:

பேராக் மாநிலத்தின் 15 உள்ளூராட்சி பகுதிகளில் இயங்கும் 60-க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற எலக்ட்ரானிக் சிகரெட் (வேப்) விற்பனை நிலையங்கள் 2026 ஜனவரி 1-ம் தேதிக்குள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

அந்த தேதிக்குப் பிறகு புதிய உரிமங்கள் வழங்கப்படாது என்றும், சமீபத்தில் உரிமத்தை புதுப்பித்த நிலையங்கள், 2026 ஜனவரி 1 வரை மட்டுமே செயல்படலாம் என்றும் மாநில வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அரசு குழுத் தலைவர் சாண்ட்ரியா எங் ஷை சிங் கூறினார்.

மேலும் அவர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும், விற்பனையாளர்கள் விரும்பினால் இந்த இடைப்பட்ட காலத்தில் பிற தொழில்களுக்குத் திரும்ப வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இந்த செயல் திட்டம் பேராக் சுகாதாரத் துறை சமர்ப்பித்த எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனை உரிமம் தடை குறித்த கொள்கை அறிக்கை அடிப்படையில் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் செப்டம்பர் 22 அன்று நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here