குபாங் பாசுவில் திடீர் வெள்ளம்; 29 வீடுகள் பாதிப்பு

ஜித்த்ரா (கெடா):

குபாங் பாசு மாவட்டத்தில் நாகா மற்றும் மலாவ் முக்கிமிலுள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 29 வீடுகள் இன்று மாலை 8 மணிவரை ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

இன்று பிற்பகல் 2 மணி முதல் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது என்று, பாசிர் கூடாங் மாவட்ட குடிமை பாதுகாப்புத் துறை அதிகாரி கேப்டன் (PA) மொஹ்ட். அடெனின் சுஹைமி தெரிவித்தார்.

“இதுவரை மிக அதிகம் பாதிக்கப்பட்டது முகிப்பா கிராமம், அங்கு 15 வீடுகள் நீரில் மூழ்கின. தொடர்ந்து, தெங்கா மலாவ் கிராமத்தில் 12 வீடுகள் மற்றும் பாயா டொக் தே, கெமுண்டிங் பாரு ஆகிய கிராமங்களில் தலா ஒரு வீடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன,” என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here